அ னந்தனின் ஆராட்டு

 



அ னந்தனின் ஆராட்டு

தேவ நாம் பத்மநாபன்

தேரோட்டத்தில்

தேனினும் இனிய

தேவ இசை நம்

செவிகளில் ஒலிக்க

தென்றல் காற்று

மெது வாய் நம்

மேனியை தீண்ட

மேல் உயரும்

மேன்மையான

நறு மண புகை -நம்

நாசி வழி சென்று -சப்த

நாடியையும்

நல முறை செய்யுதய்யா ?

சங்கு முகம் தன்னில்

சங்கமிக்கும் பொழுது

சாகரத்தில் கரைவது-நம்

சங்கடங்களும் தானய்யா ?

அனந்தன் அடி பணிந்தால்

அருள் புரிவான் -நம்

அருமையான வாழ்விற்கு

அணுவளவும் சந்தேகம் உண்டோ ?

அவணி மாந்தர் கால் ?

Comments

Popular posts from this blog

KARGIL WAR MEMORIAL MUSEUM

kalathilakam of thaliyal brahmana upasabha-2011